Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது: எடப்பாடி

In இந்தியா
Updated: 04:55 GMT, Dec 30, 2017 | Published: 04:55 GMT, Dec 30, 2017 |
0 Comments
1160
This post was written by : Varothayan

ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க எனும் பேரியக்கத்தை அசைக்க முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், நேற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கட்சிக்கு களங்களம் விளைவித்தவர்களின் ஆட்சி இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே தொடரும்’ என்றார்.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘அ.தி.மு.க ஆட்சி மீது திட்டமிட்டு வீண்பழியை சுமத்தி அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சி செய்கின்றனர். ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க எனும் பேரியக்கத்தை அசைக்க முடியாது’ என்றார்.

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி, ‘ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம், ரஜினி கட்சி தொடங்கினால் அதுபற்றி பேசலாம்’ எனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg