Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோந்துப் பணிகளில் ரோபோ: ஹைதராபாத்தில் பணி நியமனம்

In அறிவியல்
Published: 05:58 GMT, Dec 30, 2017 |
0 Comments
1118
This post was written by : Varothayan
Hyderabad-robot-police-appointment

உலகிலேயே முதன் முறையாக இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில், வீதி ரோந்துப் பணிகளுக்கு என ரோபோ பொலிஸ் திணைக்களத்தினால் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் வழிப்பறி, கொலை, கொள்ளை, விபத்து போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகிறன. எனவே, அவற்றை கண்காணித்து முறைப்பாடுகளை பதிவு செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ‘ரோபோ’ ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவை 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்டதுடன் ஒளிப்பதிவுக் கருவிகள் மற்றும் சென்சார் எனப்படும் உணர்வு கருவி ‘ஜி.பி.எஸ்.’ உடன் பொருத்தப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில் உள்ள ‘எச்.பாட்ஸ்’ ரோபோடிக் என்ற நிறுவனம் தாய்லாந்தின் ‘அமிகோ’ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ள இந்த ரோபோவால் பல இடங்களுக்கு நகர்ந்து செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ரோந்து பணிக்கு மட்டுமின்றி, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டுகளையும் கண்டுபிடிக்க பயன்படுத்தலாம். அதற்கான செயலியும் இதில் உள்ளது. மேலும் சந்தேக நபரும் இதன் பார்வையில் இருந்து தப்ப முடியாது எனக்குறிப்பிடப்படுகிறது.

நேற்று இந்த ‘ரோபோ’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜூலை மாதம் ஹைதராபாத் பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து அது தனது பணியை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg