Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தாண்டுக் கொண்டாட்டம்: பரிஸில் பாதுகாப்புத் தீவிரம்

In ஐரோப்பா
Published: 06:33 GMT, Dec 30, 2017 |
0 Comments
1107
This post was written by : Suganthini

எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு, பிரான்ஸ் தலைநகரான பரிஸில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, பரிஸின் தலைமைப் பொலிஸ் அதிகாரி மிச்சேல்  டெல்பீச்  (Michel Delpuech) தெரிவித்துள்ளார்.

பரிஸிலுள்ள Champs Elysees பகுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளதுடன், வானவேடிக்கைகளும் நிகழ்த்தப்படவுள்ளன. இதனை முன்னிட்டு அதிகளவான பொலிஸாரை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் கடமையில் ஈடுபடுத்தத் தீர்மானித்துள்ளதாகவும்,  அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், பரிஸ் பூராகவும் சுமார் 10 ஆயிரம் பொலிஸாரும், பாதுகாப்புப் படை வீரர்கள் சுமார் 2 ஆயிரம் பேரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

மேலும், குறித்த பகுதியில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், சோதனை நடவடிக்கையிலும் பொலிஸ் ஈடுபடுவார்களெனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 3 வருடங்களாக பிரான்ஸில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் 230க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர். பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துக் காணப்படும் இச்சூழ்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு பரிஸில் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg