Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முபாதலா டென்னிஸ் தொடரிலிருந்து ஜோகோவிச் விலகல்!

In டெனிஸ்
Updated: 07:49 GMT, Dec 30, 2017 | Published: 07:49 GMT, Dec 30, 2017 |
0 Comments
1134
This post was written by : Anojkiyan

முபாதலா டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் அறிவித்துள்ளார்.

இத்தொடரின் அரையிறுதி போட்டியில் ஸ்பெயினின் ராபர்டோ பௌதிஸ்டா அகுட்டுடன் அவர் மோத இருந்த நிலையில், போட்டி தொடங்குதற்கு 4 மணி நேரம் முன்பாக இந்த முடிவை அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ஜோகோவிச் கூறியுள்ளதாவது, “முழங்கையில் கண்டுள்ள காயத்தில் கடந்த சில நாள்களாக வலி இருந்து வருகிறது. பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், போட்டியிலிருந்து விலகி சிகிச்சையை தொடருமாறு மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது. எனவே, முபாதலா டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுகிறேன்.

அடுத்த பருவக்காலத்திற்கான போட்டித் திட்டங்கள் இதனால் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. வரும் நாள்களில் அதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன்” என கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg