Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உறைபனி மழை-இருளில் தவிக்கும் பிரிட்டிஷ் கொலம்பிய மக்கள்

In கனடா
Updated: 10:56 GMT, Dec 30, 2017 | Published: 10:54 GMT, Dec 30, 2017 |
0 Comments
1060
This post was written by : Elakkiya
ice-e1514570523184

உறைபனி மழை மற்றும் மரங்கள் மின் இணைப்புக்களில் பனிக்கட்டி உருவாக்கங்களால் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பலபகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை மெரிட்டிலிருந்து கெலொவ்னா இடையிலான நெடுஞ்சாலையில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று போக்குவரத்து எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பெரும்பகுதிகளில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஏற்பட்ட உறைபனி மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் Fraser Valley பகுதியும் ஒன்றாகும். இந்த உறைபனி மழை நேற்று வெள்ளிக்கிழமையும் தொடர்ந்த நிலையில் அப்போட்ஸ்ஃபோர்ட் மற்றும் மிஷன் பகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாக சில வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறிருக்க பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஆரோ ஏரிக்குள் மூழ்கிய நிலையில் 10 வயது சிறுவன் ஒருவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் உயிரிழந்த சிறுவனின் பெயர் விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg