Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு எட்மன்டன் இரசாயன ஆலையில் தீப் பரவல்

In கனடா
Updated: 11:29 GMT, Dec 30, 2017 | Published: 11:29 GMT, Dec 30, 2017 |
0 Comments
1085
This post was written by : Elakkiya

வடக்கு எட்மன்டன் பகுதியில் அமைந்துள்ள இரசாயன ஆலையில் தீச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.02 மணியளவில் இவ்வாறு தீ ஏற்பட்டுள்ளது. எனினும் 5.38 மணியளவில் தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக எட்மன்டன் தீயணைப்பு பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தீ பரவல் ஏற்பட்ட போது இரசாயன ஆலையில் பணியாளர்கள் இருந்த போதிலும் அனைவரும் வெளியேற்றப்பட்டதாகவும் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg