Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் வடமாகாண கடினப்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பம்

In
Updated: 11:13 GMT, Dec 30, 2017 | Published: 11:13 GMT, Dec 30, 2017 |
0 Comments
1265
This post was written by : Varothayan

வடமாணத்தை சேர்ந்த கழகங்களுக்கிடையிலான கடினப்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது.

ஆகாஸ் வெற்றிக் கிண்ணத்திற்கான இப்போட்டியானது வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஒருங்கிணைப்பில் வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பமாகியது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா உதவிபொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெனாண்டோ கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

வட மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நடைபெறவுள்ள கடினப்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் 32 கழகங்கள் பங்குபற்றவுள்ளன.

தைப்பொங்கல் தினத்தில் இறுதிச் சுற்றுப்போட்டிகள் நடைபெறும் என்பதுடன் 10 ஓவர்களை கொண்ட இப்போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகும் அணிகள், 20 ஓவர்களைக்கொண்ட சுற்றுப்போட்டியில் விளையாடும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வவுனியா வானவில் அணியினரும் கிளிநொச்சி யுனைட்டட் அணியினரும் இன்றைய ஆரம்பப் போட்டியில் பங்குபற்றினர்.

வடமாகாணத்திலுள்ள திறமையான வீரர்களை வெளிக்கொணர்தலும், பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான நல்லுறவை ஏற்படுத்தலுமே இத் துடுப்பாட்ட சுற்றுப் போட்டியின் நோக்கம் என வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆகாஸ் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் முதலாம் பரிசாக மூன்று இலட்சம் ரூபாவும், இரண்டாம் பரிசாக ஒரு இலட்சம் ரூபாவும், வழங்கப்படவுள்ளது.

நிகழ்வில் ஆகாஸ் நிறுவனத்தின் இயக்குனர் எஸ் ராம்சுப்பிரமணியன், வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி மற்றும் விழையாட்டு வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_8710 IMG_8717 IMG_8752

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg