Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமா வாய்ப்பிற்காக சத்திரசிகிச்சை செய்த நடிகைகள்?

In கிசு கிசு
Published: 13:47 GMT, Dec 30, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Ravivarman
164206-shruti-haasan-650

சினிமா வாய்ப்பிற்காக முன்னணி நடிகைகள் பலர் தம்முடைய உடற் பகுதிகளை சத்திரசிகிச்சை செய்து கொள்வது உண்மை என விஸ்வரூபத்தின் புதல்வி தெரிவித்துள்ளார்.

அண்மையில் சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சினிமாவை வெளியில் இருந்து பார்க்கும் போது எமக்கு மிகவும் சாதாரணமாக தெரியும். வெற்றி இடத்தை பிடிப்பது என்பது சாதாரணமான விடயம் கிடையாது.

ஆனால் நடிகர்கள் ஒருபக்கம் உடம்பை மெருகேற்ற உழைத்தாலும் நடிகைகள் தங்களது உடலை அழகுபடுத்த நிறைய விடயங்கள் செய்வர்.

அதில் ஒன்று சாதாரணமாக இருந்தாலும் கூட தன்னுடைய உதடு சிரிப்பது போல் காட்சியளிக்க சிலர் சத்திரசிகிச்சை செய்து கொண்டுள்ளனர்.

சமந்தா, அனுஷ்கா சர்மா, அசின், பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப், பிரித்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி போன்றவர்கள் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பதற்கு இதுவே காரணம்” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg