Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெற்றியுடன் 2017க்கு விடை கொடுத்தார் பெடரர்

In டெனிஸ்
Published: 04:21 GMT, Dec 31, 2017 |
0 Comments
1093
This post was written by : Varothayan
Roger Federer

அவுஸ்ரேலியாவில் நேற்று ஆரம்பித்த ஹொப்மேன் கிண்ண டென்னிஸ் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்த ஆண்டின் இறுதியை வெற்றியுடன் நிறைவு செய்தார் சுவிட்சர்லாந்து வீரர் ரொஜர் பெடரர்.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ரொஜர் பெடரரும், ஜப்பான் நாட்டை சேர்ந்த யூகி சுகிதாவும் மோதினர். அண்மைக்காலமாக காயங்களால் அவதிப்பட்டு வந்த பெடரர், நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார்.

அவரை எதிர்த்து விளையாடிய ஜப்பான் வீரர் யூகி சுகிதாவும் போராடினார். இதனால் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் பெடரர் கைப்பற்றினார். இதையடுத்து, நடந்த இரண்டாவது செட்டிலும் பெடரர் அற்புதமாக விளையாடினார்.

ஜப்பான் வீரரால் பெடரரின் ஆட்டத்துக்கு முன் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால், இரண்டாவது செட்டை 6- 3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இறுதியில், 6-4, 6-3 என்ற நேர் செட்களில் ஜப்பான் வீரரை பெடரர் வென்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg