Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கற்றலோனியத் தேர்தல் முடிவுகளை ஏற்க கார்லெஸ் வலியுறுத்து

In
Published: 05:11 GMT, Dec 31, 2017 |
0 Comments
1129
This post was written by : Suganthini

கற்றலோனியாவில் நடத்தப்பட்ட பொதுத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு, கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont)  வலியுறுத்தியுள்ளார்.

பிரஸ்ஸல்ஸிலிருந்து தொலைக்காட்சி மூலமாக நேற்று (சனிக்கிழமை) உரையாற்றியபோதே, ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய்க்கு அவர் இந்த வலியுறுத்தலை அவர் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் உரையாற்றியபோது, ‘கற்றலோனியாவில் இம்மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பொதுத்தேர்தல் மூலம், ஸ்பெய்னிலிருந்து பிரிந்து, வடகிழக்குப் பிராந்தியத்துக்கான சுதந்திரத்தை ஆதரிக்கும் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. ஆகவே, இந்தப் பொதுத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள ஸ்பெய்ன் அரசாங்கம் முன்வர வேண்டும்’ என்றார்.

‘இந்தத் தேர்தலில், ஒவ்வொருவரும் தமது தீர்மானத்தை வெளிக்காட்டியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வதில் ஸ்பெய்னுக்கு பிரதமருக்கு ஏன் இந்தத் தாமதம்’ எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

‘கற்றலோனியா ஜனநாயக ரீதியாக முதிர்ச்சியடைந்தமை மக்களால் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கற்றலோனியாவுக்கு சுதந்திரத்தைக் கோரும் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை ஸ்பெய்ன் அரசாங்கம் ஆரம்பிக்க  வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg