Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய வர்த்தக நிலையக் குண்டு வெடிப்பு: ஒருவர் கைது

In
Published: 05:57 GMT, Dec 31, 2017 |
0 Comments
1082
This post was written by : Suganthini
bomb

ரஷ்யாவின் சென். பீட்டர்ஸ்பேர்க் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பொலிஸார் நேற்று (சனிக்கிழமை) கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் விசாரணை நடத்தி வருவதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பல்பொருள் அங்காடியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில், 18 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, இந்தக் குண்டு வெடிப்புக்கு, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.

வீட்டில் தயாரிக்கப்பட்ட குண்டே பல்பொருள் அங்காடியில் வெடிக்க வைக்கப்பட்டதாக, பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதேவேளை, இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்திருந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஆட்சேர்ப்புக்கான கடுமையான தண்டனைச் சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg