Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதவாச்சி – மன்னார் வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

In இலங்கை
Published: 06:14 GMT, Dec 31, 2017 |
0 Comments
1108
This post was written by : Varothayan
26235496_1459256707520603_579835145_n

மதவாச்சி – மன்னார் வீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதவாச்சி – மன்னார் பிரதான வீதியில் நேரியகுளம் பகுதியிலேயே குறித்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 21 வயதான மேகராஜ் என்பவரே குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார் சாரதி வேகத்தினை கட்டுப்படுத்த தவறியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை வெங்கலச் செட்டிகுளம் பிரதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

26176473_1459257054187235_1593645621_n 26197595_1459256634187277_807751754_n

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg