கனடாவுக்கான விஜயத்தில் ட்ரம்ப் படைத்த சாதனை

அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தான் பதவியேற்ற முதல் வருடத்தில் கனடாவுக்கு விஜயம் செய்யவில்லை என்ற வரலாற்றுப் பதிவை 40 வருடங்களின் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் படைத்துள்ளார்.
இதற்கு முன்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டர் இவ்வாறு, தமது அயல் நாடான கனடாவுக்கு செல்வதை முதல் வருடத்தில் தவிர்த்திருந்தார். ஆனாலும், ட்ரம்பின் இந்த விடயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என முன்னாள் ராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கனடாவின் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்காவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு, வெள்ளை மாளிகையில் ட்ரம்பைச் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ரொனால்ட் ரீகன் பதவியேற்ற நான்காவது மாதத்திலும், ஜோர்ச் எச்.டபிள்யூ.புஷ் மூன்றாவது வாரத்திலும், பில் கிளின்டன் இரண்டரை மாதத்திலும், ஜோர்ச் டபிள்யூ புஷ் மூன்றாவது மாதத்திலும், பராக் ஒபாமாக முதலாவது மாதத்திலும் கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், ட்ரம்ப் ஏன் செல்லவில்லை என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகிறது.