Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுமிகளின் ஆத்ம சாந்தி வேண்டி நூற்றுக்கணக்கானோர் பிரார்த்தனை

In கனடா
Updated: 08:16 GMT, Dec 31, 2017 | Published: 08:16 GMT, Dec 31, 2017 |
0 Comments
1157
This post was written by : Varothayan

பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஓக் பே பகுதியில் கிறிஸ்மஸ் தினத்தன்று கொல்லப்பட்ட இரண்டு சிறுமிகளின் ஆத்ம சாந்தி வேண்டி, நூற்றுக்கணக்காகவர்கள் நேற்று மெழுகுவர்த்திகளை ஏந்தி பிரார்த்தித்துள்ளனர்.

ஓக் பே பகுதியில் உள்ள கடற்கரையொன்றில் ஒன்று திரண்ட மக்கள், மௌனமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதன் போது, தங்கள் பெற்றோரின் அருகில் நின்ற குழந்தைகள் மற்றும் சிறுவர்களும் தங்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியிருந்தமை பார்ப்போரை நெகழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

சோகம் ததும்பும் விதத்தில் பியானோ இசையும் அங்கு இசைக்கப்பட்டிருந்தது.

chloe-berry-6-and-aubrey-berry-4

பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா தொடர்மாடிப்பகுதியில் கிறிஸ்மஸ் தினத்தன்று 6 வயதாக சோல் பெர்ரி மற்றும் 4 வயதான ஓபெரி பெர்ரி ஆகிய சகோதரிகள் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து காணப்பட்டனர்.

குறித்த குழந்தைகளின் தந்தையே அவர்களை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்யும் எண்ணத்தில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வன்கூவர் குற்றவியல் பொலிஸ் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg