Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தாண்டு: பேர்லினில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

In ஐரோப்பா
Updated: 08:29 GMT, Dec 31, 2017 | Published: 08:29 GMT, Dec 31, 2017 |
0 Comments
1132
This post was written by : Suganthini

புத்தாண்டை முன்னிட்டு ஜேர்மனின் பேர்லின் நகரில் பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டுப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேர்லின் நகரிலுள்ள பிராண்டன்பேர்க் (Brandenburg) சதுக்கத்தில் மிக விமரிசையாக புத்தாண்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதன்போது, இசைக்கச்சேரியுடன் வானவேடிக்கைகளும் நிகழ்த்தப்படவுள்ளன.

குறிப்பாக, இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பெண்கள், தாக்குதலுக்கோ அல்லது அச்சுறுத்தலுக்கோ உள்ளாகுவதைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் பயணப்பைகள், பாரிய பொதிகளைக் கொண்டுவருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மதுபானப் பாவனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg