Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘உள்குத்து’ ரசிகர்களை ஏமற்றவில்லை!

In திரை விமர்சனம்
Published: 09:21 GMT, Dec 31, 2017 |
0 Comments
1101
icon_com
This post was written by : Surenth
ulkuthu

பிரபல ரௌடியாக இருக்கும் பால சரவணனிடம் ‘எம்.பி.ஏ படித்திருக்கிறேன், வீட்டில் சண்டை போட்டுவிட்டு வந்துவிட்டேன்’ என்று தன் கதைச் சுருக்கத்தைக் கூறும் தினேஷுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்.

தினேஷை அந்த பகுதியில் சேர்த்துக்கொள்வதால் மீன்சந்தை தொழிலாளர் சங்கத் தலைவர் செஃப் தாமு கோபமாக, அவரை தன் தனிப்பட்ட அணுகுமுறையால் பால சரவணன் சாந்தப்படுத்துகிறார்.

பால சரவணன், சுறா சங்கர் என்ற அடைமொழியில் கடற்கரையோரம் இருக்கும் ரௌடியுடன் சண்டை போடுகிறார். இதன்போது சுறா சங்கர் பால சரவணனை வெளுத்து வாங்குகிறார். இதைக் கேள்விப்பட்டு வரும் தினேஷ் சுறா சங்கரை தாக்குகிறார்.

இதனையடுத்து, தினேஷ் ‘காக்கா மணி’ சரத் லோகிதஸ்வாவின் ஆள் என்பது தெரிய வருகிறது. இதனால் எதிர்ப்புகளை சம்பாதிக்கும் தினேஷை திட்டம் போட்டு தூக்க ஒரு கும்பல் புறப்படுகிறது. தினேஷ் என்ன ஆனார், அவர் யார்? பின்புலம் என்ன என்பது தான் திரைக்கதை.

தினேஷின் மச்சானாக ஜோன் விஜய், அக்காவாக சாயா சிங் ஆகியோர் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ரௌடியான ஜோன் விஜய் காதல் மனைவி சாயா சிங்கிடம் குழையும் காட்சிகளிலும், உண்மை தெரிந்துவிடக்கூடாது என கடைசி நேரத்திலும் பதறும் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கின்றார்.

ஶ்ரீமன் குரோதம் மிகுந்த ரௌடியாக மிரட்டி இருக்கிறார். கதாநாயகியான நந்திதா தினேஷை பார்த்ததுமே காதல் கொண்டு, மருகும் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். ஆனால், அவருக்கும் அதிகமான வசனங்களும், காட்சிகளும் இல்லை.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் பெரிதாக மனதை ஈர்க்கவில்லை. பின்னணி இசை உணர்வுகளைக் கிளறச் சிரமப்பட்டிருக்கிறது. பல காட்சிகள் அழுத்தமே இல்லாமல் கடந்து போகின்றன.

பின்னணி காட்சியும் அழுத்தமில்லாமல் மேலோட்டமாக நகர்ந்து, ரசிகர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த மறுக்கிறது. படம் முழுக்க மீனவக் குப்பத்தில் நடந்தாலும் மீனவர்களின் வாழ்வியலை மனதைக் கவரும் வகையில் பதிவு செய்யத் தவறியிருக்கிறார்கள்.

வழக்கமான ரௌடி – ஹீரோ பாணி கதைதான் என்றாலும் படத்தின் கடைசியில் நல்ல தகவல் ஒன்றையும் சொல்லிக் கவர்ந்திருக்கிறார்கள். அதற்காகவாவது படம் பார்க்கலாம். ‘உள்குத்து’ ரசிகர்களை ஊறப்போட்டு ஊமைக்குத்தாகக் குத்தவில்லை என்பதே உண்மை!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg