Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோய்த் தீர்க்கும் வெந்தயம்!

In
Updated: 10:06 GMT, Dec 31, 2017 | Published: 10:06 GMT, Dec 31, 2017 |
0 Comments
1712
This post was written by : Surenth

நீரழிவு நோய் ஏற்பட்டவர்களுக்கு வெந்தயம் ஒரு அருமையான மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது. மேலும், இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ அமிலங்கள் வெந்தயத்தில் இருப்பதால் இன்சுலினை சுரக்கச் செய்கிறது.

தினமும் இரவு நேரத்தில் சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர, ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமாகும். மத்திய, முற்றிய நிலை நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

வெந்தயத்தில் வேதிப்பொருள் உள்ளதால் இருதய நோய் வருவதை தடுக்கிறது. வெந்தயத்தில் தேவையான பொட்டாசியம் இருப்பதால் இரத்தத்தையும் இருதய துடிப்பும் கட்டுக்குள் வைக்கிறது. மேலும், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை இரத்தில் குறைக்கிறது.

நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் போன்றவற்றைப் போக்க வெந்தயம் உதவுகின்றது. இரத்த சோகை உள்ளவர்கள் வெந்தயம் உபயோகித்தால் அதிலிருந்து விடுபடலாம். இரத்த அணுக்களின் உற்பத்தியை வெந்தயம் தூண்டிவிடுகிறது. வெந்தயத்தை முளைக்க வைத்து உபயோகப்படுத்தலாம்.

முகப் பொலிவை வெந்தயம் மெருகேற்றுகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், சுருக்கங்கள் போன்றவற்றை வெந்தயம் கலந்த முகப்பூச்சுகள் நீக்குகின்றன. வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் தடவ முகம் பளபளக்கும்.

வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறு நாள் காலையில் அரைத்து தரைமுடியின் அடிக்கால்களில் தடவி அரை மணிநேரம் வைக்க வேண்டும். பின் குளிக்க வேண்டும். இதனால் பொடுகு குறையும். முடி உதிர்வது நிற்கும். தலைமுடி அடர்ந்து வளரும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg