Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவில் விமானம் விபத்து: 6 பேர் உயிரிழப்பு

In
Published: 10:15 GMT, Dec 31, 2017 |
0 Comments
1172
This post was written by : Suganthini
sea

அவுஸ்ரேலியாவின் சிட்னியில் கடல் விமானமொன்று (seaplane) விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமானி உட்பட ஐந்து பயணிகளுடன் பயணித்த டி.எச்.சி. -2 எனும் கடல் விமானம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிட்னி ஆற்றி விழுந்து விபத்துக்குள்ளானதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிட்னியின் வடபகுதியிலுள்ள உணவகமொன்றில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்களை ஏற்றிக்கொண்டு இந்த விமானம், றோஸ் குடாவுக்கு திரும்பியபோதே, விபத்துக்குள்ளானது.

உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இந்த விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லையெனவும் கூறியுள்ளனர்.

இருப்பினும், இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg