Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான விளாம்பழம் சாலட்!

In
Published: 10:59 GMT, Dec 31, 2017 |
0 Comments
1117
This post was written by : Surenth
Vilampalam

விளாம்பழத்தை ஜூஸ் செய்து குடிப்போம். அது எமக்கு சுவையாகத் தான் இருக்கும் காரணம் ஜூஸ் செய்து குடித்து பழகிவிட்டோம். மாறாக விளாம்பழம் சாலட் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

விளாம்பழம் (மசித்த) – 2 கப்
வெல்லம் (இலங்கை சர்க்கரை) – ஒரு கப்
இஞ்சி+ உள்ளி (பூண்டு) விழுது – ஒரு தேக்கரண்டி
உப்பு + மஞ்சள் தூள் – சிறிதளவு
கடுகு – ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2
வெங்காயம் – அரைப்பாகம்
சீரகம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை

விளாம்பழம், உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும்.
பிறகு கீழே இறக்கி வைத்து இஞ்சி+பூண்டு (உள்ளி) விழுதை சேர்க்கவும்.
கடுகு, பச்சைமிளகாய், வெங்காயம், சீரகம் ஆகியவற்றை தாளித்து பிறகு சேர்க்கவும்.
விளாம்பழ சாலட் தயாராகி விட்டது. இப்போது இதனைப் பரிமாற முடியும்.
வைட்டமின் சி நிறைந்த குளிர்ச்சியான சாலட், தடிமலை வராமல் தடுக்க உதவும். இது குளிர்ச்சியானது மழைக்காலங்களில் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg