Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்கானில் குண்டு வெடிப்பு: 6 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 11:17 GMT, Dec 31, 2017 | Published: 11:17 GMT, Dec 31, 2017 |
0 Comments
1151
This post was written by : Suganthini

ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நகரில் முன்னாள் மாவட்ட ஆளுநரின் இறுதிச்சடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற வேளையில் குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கில் அதிகளவான மக்கள் கூடியிருந்ததாகவும், இந்நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கலாமெனவும் அஞ்சப்படுகின்றது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலிலுள்ள கலாசார நிலையமொன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg