Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியின் அரசியல் பிரவேசம் அ.தி.மு.க.வை பாதிக்காது: முதல்வர்

In இந்தியா
Updated: 16:13 GMT, Dec 31, 2017 | Published: 12:05 GMT, Dec 31, 2017 |
0 Comments
1193
This post was written by : Kemasiya

அ.தி.மு.க.வை வெல்வதற்கு இதுவரை யாரும் பிறந்ததும் இல்லை, இனியும் பிறக்கப்போவதும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை திண்டுக்கல்லில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்கு சென்ற முதல்வர் ஊடகவியலாளர்களிடம் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

“ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அரசியலுக்கு வருவதற்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையில் அவரும் அரசியலுக்கு வருகிறார்.

அவரின் அரசியல் பிரவேசத்தினால் அ.தி.மு.க.விற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இந்த கட்சி இரு பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி.

எனவே அதனை வெல்வதற்கோ,  உடைப்பதற்கோ இதுவரை எவரும் பிறக்கவும் இல்லை,  இனியும் பிறக்கப்போவதும் இல்லை, ” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg