Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதே இலக்கு: ரஜினிகாந்த்

In இந்தியா
Updated: 12:06 GMT, Dec 31, 2017 | Published: 11:42 GMT, Dec 31, 2017 |
0 Comments
1426
This post was written by : Risha

தமிழகத்தில் சாதி பாகுபாடற்ற நேர்மையான ஆன்மீக அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதே தன்னுடைய அரசியல் பிரவேசத்தின் இலக்கு என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அரசியல் பிரவேசம் பற்றிய ஊகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் உரையாற்றிய ரஜினிகாந்த் தொடர்ந்து தெரிவிக்கையில், ”பணம், பதவி, புகழ் அனைத்தையும் எதிர்பார்ப்பிற்கு அதிகமாக ரசிகர்களாகிய நீங்கள் வழங்கிவிட்டீர்கள். அவற்றிற்காக நான் அரசியலுக்கு வழங்கவில்லை.

அண்மை கால தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகள் அனைவரும் சிரிக்கும் வகையில் மோசமாக இருக்கின்றது. ஜனநாயகம் சீரழிந்திருக்கிறது. அவற்றிலிருந்து தமிழகத்தை காப்பாற்றும் வகையிலேயே இந்த அரசியல் பிரவேசம் அமைகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி தொடர்கின்ற நிலையில், அதனை மாற்றும் வகையில் தனது அரசியல் பிரவேசம் அமைந்துள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg