Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலில் தமிழ்-முஸ்லிம் அரசியல் கட்சிகள் கூட்டணி சேராமல் வெற்றி பெற முடியாது: சீ.வி.

In இலங்கை
Updated: 02:41 GMT, Jan 1, 2018 | Published: 02:41 GMT, Jan 1, 2018 |
0 Comments
1266
This post was written by : Anojkiyan

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைச் சார்ந்த சிறிய அரசியல் கட்சிகள் கூட்டணி சேராமல் வெற்றி பெற முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையினால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் சிறிய கட்சிகளே. இந்த விடயம் குறித்து எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் அவதானத்திற்கு கொண்டு வர தயாராகவுள்ளேன்.

மேலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைச் சார்ந்த சிறிய அரசியல் கட்சிகள் புதிய தேர்தல் முறையின் கீழ், கூட்டணி சேராமல் வெற்றி பெற முடியாது. இதேவேளை, இவ்வாறு கூட்டணி அமைக்கும் போது, அக் கட்சிகளின் தனித்துவம் மற்றும் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg