Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அரசியல்வாதிகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் சொத்து!

In இலங்கை
Updated: 02:57 GMT, Jan 1, 2018 | Published: 02:57 GMT, Jan 1, 2018 |
0 Comments
1151
This post was written by : Anojkiyan

இலங்கை வம்சாவளி அரசியல்வாதிகளால் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் பல சொத்துக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு, நிதிமோசடிகளுக்கு எதிரான பொலிஸ்துறை உட்பட்ட தரப்பினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

எனினும் இந்த தகவல்களை வெளியிட்ட சட்டத்துறை அதிகாரிகள், யார் இந்த குற்றச்செயலுக்கு பொறுப்பானவர்கள் என்ற தகவலை வெளியிடவில்லை.

இந்த சொத்துக்கள் தற்காலிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த சொத்துக்களை மறைத்துவைத்துள்ள இலங்கையர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்ற அடிப்படையில் தற்போது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு காலம் தாமதம் ஏற்படும் என்ற போதிலும் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ள சட்டத்துறை அதிகாரிகள், அவர்களின் சொத்துக்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg