Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெஹிவளை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து!

In இலங்கை
Published: 04:01 GMT, Jan 1, 2018 |
0 Comments
1107
icon_com
This post was written by : Anojkiyan
fire001

தெஹிவளை பகுதியில் உள்ள பொலித்தீன் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெஹிவளை – அத்திடிய பகுதியில் அமைந்துள்ள பொலித்தீன் உற்பத்தி தொழிற்சாலையிலேயே இன்று (திங்கட்கிழமை) அதிகாலை குறித்த தீப்பரவியுள்ளது.

இந்நிலையில் இரண்டு தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீயை அணைத்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த தீப்பரவலால் பொலித்தீன் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பல இரசாயண பொருட்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தீ பரவியதற்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg