Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க அனைவரும் ஒன்றிணைவோம்: பிரதமர்

In இலங்கை
Published: 03:48 GMT, Jan 1, 2018 |
0 Comments
1131
This post was written by : Ravivarman
ranilw-e1432288993805

சமூக, அரசியல் சுதந்திரத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்கும் பாதையில் அனைவரும் ஒன்றிணைவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்படும்போது நாட்டில் பாரிய சமூக, பொருளாதார, அரசியல் வீழ்ச்சி காணப்பட்டதுடன், கடுமையான கஷ்டங்களுக்கு மத்தியில் கூட நிலைபேறான அபிவிருத்திச் செயற்பாடு ஊடாக பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கிச் செல்ல நாம் நடவடிக்கை மேற்கொண்டோம்.

கடந்த காலப்பகுதியில் மக்களுக்கு சமூக, அரசியல், மானிட சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும், சர்வதேச ரீதியாக எமது நாடு தொடர்பாகக் காணப்பட்ட எதிர்மறையான மனப் பாங்குகளை மாற்றியமைக்கவேண்டும்.

நட்புணர்வு மிக்க சூழலொன்றைக் கட்டியெழுப்பவும் முக்கிய கவனத்தினைச் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டோம். தற்போது எமக்கு அவற்றின் சிறந்த பிரதிபலன்களைப் பெற்றுக் கொள்ள முடியுமான நிலைமை காணப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கம் இது வரைக்கும் மேற்கொண்ட வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், 2018 ஆம் ஆண்டு துணிச்சல் மிகுந்த ஆண்டாக அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg