Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடளாவிய ரீதியில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

In இலங்கை
Updated: 04:27 GMT, Jan 1, 2018 | Published: 04:27 GMT, Jan 1, 2018 |
0 Comments
1107
This post was written by : Anojkiyan

மலர்ந்துள்ள ஆங்கில புதுவருடத்தை நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

மலர்ந்துள்ள புத்தாண்டை வரவேற்கும் முகமாக யாழில் உள்ள கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் புதுவருட ஆராதனைகள் இடம்பெற்றன.

இதன்படி, யாழ்.மறைமாவட்ட புதுவருட நள்ளிரவு ஆராதனை, மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்னம் அடிகளாரின் தலைமையில் யாழ். புனித மரியன்னை தேவாலயத்தில் நடைபெற்றது. மேலும், யாழ். நல்லூர் முருகன் ஆலயம் உள்ளிட்ட சகல ஆலயங்களிலும் காலையில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

புதுவருடத்தினை வரவேற்கும் நள்ளிரவு ஆராதனைகள் வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திலும் இடம்பெற்றது.

தலைநகர் கொழும்பிலும் புதுவருட கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. மக்கள் காலை வேளையில் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

அதேபோன்று கல்முனை இருதயநாதர் தேவாலயத்தில் அருட்தந்தை அன்றனி லியோ அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து மட்டக்களப்பு, கல்முனை போன்ற கிழக்கின் பல பகுதிகளிலுமுள்ள ஆலயங்களின் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

புத்தளம் மாவட்டத்திலும் உள்ள கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் புதுவருட ஆராதனைகள் இடம்பெற்றன.

புதுவருடத்தைக் கொண்டாடும் சகல மக்களுக்கும் ஆதவன் செய்திப்பிரிவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg