Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவுக்கான பலஸ்தீன தூதுவர் திருப்பியழைப்பு!

In உலகம்
Updated: 04:45 GMT, Jan 1, 2018 | Published: 04:45 GMT, Jan 1, 2018 |
0 Comments
1209
This post was written by : Suganthini

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஒருதலைப்பட்சமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கான தனது தூதுவரைத் திருப்பியழைக்கவுள்ளதாக, பலஸ்தீனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவுக்கான பலஸ்தீன தூதுவர் ஹுஸம் சொம்லொட்டை (Husam Zomlot) திருப்பியழைப்பதற்கான அறிவித்தலை பலஸ்தீன வெளிவிவகார அமைச்சு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

புனித நகரான ஜெருசலேமை தமது நாடுகளின் தலைநகரமென்று இஸ்ரேலும் பலஸ்தீனமும் கூறிவந்த நிலையில், கடந்த டிசெம்பர் மாதம் 6ஆம் திகதி இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகரித்திருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு அமைதி உடன்பாட்டையும் தான் ஏற்கப்போவதில்லையென, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அபாஸ் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமையை அங்கீகரித்தமையை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமென ஐ.நா. வலியுறுத்தியிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg