Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முரசொலி இணையத்தளம் முடக்கம்!

In இந்தியா
Updated: 07:46 GMT, Jan 1, 2018 | Published: 05:00 GMT, Jan 1, 2018 |
0 Comments
1126
This post was written by : Ravivarman

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் இணையத்தளத்தை நள்ளிரவு முதல் ஊடுருவிகள் முடக்கியுள்ளதுடன், அதில் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியையும் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து இணையத்தளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதுடன், இது தொடர்பாக தி.மு.க.வின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சைபர் கிரைம் பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இணையதளங்களை எவ்வளவுதான் பாதுகாப்பானதாக உருவாக்கியிருந்தாலும், அதற்குச் சவால் விடும் வகையில் ஊடுருவிகள் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.

அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் இணையத்தளங்களை முடக்கும் ஊடுருவிகள் இணையத்தளங்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg