Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பதிலடி கொடுக்குமா மே.தீவுகள்? தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து

In கிாிக்கட்
Published: 05:55 GMT, Jan 1, 2018 |
0 Comments
1036
This post was written by : Anojkiyan
ik

நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டி, இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கார்லோஸ் பிரத்வெயிட்டும் தலைமைதாங்குகின்றனர்.

இப்போட்டியில் நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியில் பெரிதும் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூன்று போட்டிகளில் கொண்ட ரி-ருவென்ரி தொடரில், முதல்போட்டியில் வெற்றிபெற்று நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஆகவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக கருதப்படுகின்றது. இப்போட்டியில் தொடரின் வெற்றியை உறுதிசெய்வதற்கு நியூசிலாந்து அணியும், தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு மேற்கிந்திய தீவுகள் அணியும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg