Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியுடன் இணைந்து அரசியல்: தமிழருவி மணியன் உறுதி!

In இந்தியா
Updated: 06:23 GMT, Jan 1, 2018 | Published: 05:17 GMT, Jan 1, 2018 |
0 Comments
1227
This post was written by : Ravivarman

ஆன்மீகம் சார்ந்த அரசியலில் ஊழலுக்கு இடம் கிடையாது என்பதால் காந்திய வழியில் அவருடன் இணைந்து அரசியல் பணியாற்ற விரும்புகிறேன் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழருவி மணியன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,”காந்தியம் முன்னெடுக்கும் அரசியலே ஆன்மீக அரசியல் தான். ஆன்மீகம் என்பது வேறு. மதம் என்பது வேறு. மதம்சார்ந்த மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே நேசிப்பவர்கள். ஆனால் ஆன்மீகம் அரசியலைவிட்டு வேறுபட்டு நிற்கிறது.

உலகத்தில் உள்ள அனைவரையும் அன்பினால் அரவணைத்துக் கொள்வது தான் ஆன்மீகம். அந்த ஆன்மீகம் சார்ந்த அரசியல் வரவேண்டும். ஆன்மீக அரசியலில் ஊழலுக்கு இடம் கிடையாது. தவறுகளுக்கு, குற்றங்களுக்கு இடம் கிடையாது.

ஆன்மீக அரசியலை முன்னெடுக்கும் ரஜினிகாந்த் காந்திய வழியில் தடம் பதிக்கிறார் என்று தான் பொருள். எனவே காந்திய வழியில் அவருடன் இணைந்து அரசியல் பணியாற்ற விரும்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறிவந்த நிலையில், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் திருச்சியில் கடந்த ஓகஸ்ட் மாதம் தமிழருவி மணியன் மாநாட்டினையும் நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg