Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேஷியாவில் புத்தாண்டுச் சுபமுகூர்த்தத்தில் சுமார் 450 ஜோடிகளுக்குத் திருமணம்

In
Published: 05:17 GMT, Jan 1, 2018 |
0 Comments
1088
This post was written by : Suganthini

உலகம் பூராகவும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த வேளையில், ஒரேநேரத்தில் 450க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்த சுவாரஸ்யமான நிகழ்வு, இந்தோனேஷியாவில் நடைபெற்றுள்ளது.

இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகத்திராவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு, இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

450க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு ஒரேநேரத்தில் திருமணம் செய்துவைக்கப்பட்டு, திருமணப்பதிவுச் சான்றிதழ்களையும் அரசாங்க அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

திருமண ஜோடிகளில் பலர், ஒரே வண்ணமயமானதும் பாரம்பரியதுமான ஆடைகளை அணிந்திருந்தனர்.

புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், இந்தோனேஷியாவில் 450க்கும் மேற்பட்ட ஜோடிகள் ஒரேநேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்ததாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg