லிவர்பூல் வாகனத் தரிப்பிடத்தில் தீ: சுமார் 1,400 கார்கள் தீக்கிரை
வட இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் பல மாடிகளைக் கொண்டு அமைந்துள்ள வாகனத் தரிப்பிடமொன்றில் திடீரென்று தீ பரவியதில், சுமார் ஆயிரத்து 400 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.
மேற்படி நகரில் அமைந்துள்ள கிங்ஸ் டொக் வாகனத் தரிப்பிடத்திலேயே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வாகனத் தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியில் ஒரே புகைமூட்டமாகக் காணப்பட்டதால், அக்குடியிருப்புத் தொகுதியில் வசித்துவந்த குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வாகனத் தரிப்பிடத்துக்கு காணப்படும் லிவர்பூல் எக்கோ அரினா பூங்காவில் நடைபெறவிருந்த சர்வதேச குதிரை நிகழ்ச்சி, தீ விபத்தையடுத்து ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குதிரைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் 21 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவொரு பாரிய தீ விபத்தெனவும், தீயணைப்புப் படை வீரர்கள் கூறியுள்ளனர்.