Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல்: திண்டுக்கல் சீனிவாசன்!

In இந்தியா
Updated: 09:52 GMT, Jan 1, 2018 | Published: 06:45 GMT, Jan 1, 2018 |
0 Comments
1290
This post was written by : Ravivarman
Tamil_News_large_1861266

இன்னும் 3 மாதத்தில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”உழைப்பால் உயர்ந்த எம்.ஜி.ஆர். தனது ஈகைக் குணத்தால் தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். 45 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண நபராக இருந்த நான் வனத்துறை அமைச்சராகி இருக்கிறேன்.

அ.தி.மு.க.வில் உண்மையாக உழைப்பவர்கள் நல்ல நிலைமைக்கு வருவார்கள். ஆனால், குறுக்கு வழியில் வந்த ஒருவர் 3 மாதத்தில் ஆட்சியை கலைப்பேன் என்கிறார்.

எனவே, இதனால் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வரலாம். வந்தால் அதையும் சந்திப்போம். அனைவரும் அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg