Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆண் துணை இன்றி ஹஜ் யாத்திரைக்கு செல்லலாம்: பிரதமர் மோடி!

In இந்தியா
Published: 07:32 GMT, Jan 1, 2018 |
0 Comments
1152
This post was written by : Ravivarman
201801011122531914_Muslim-Women-Can-Now-Travel-For-Haj-Without-Male-Guardian_SECVPF

ஹஜ் யாத்திரைக்கு செல்லும் முஸ்லிம் பெண்கள் இனி ஆண்களின் துணையின்றிச் செல்லலாம் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மக்களுடன் கலந்துரையாடும் விதமாக மன் கி பாத் நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்த ஆண்டின் இறுதியை மன் கி பாத் நிகழ்ச்சியுடன் நிறைவு செய்த மோடி, மேற்படி முக்கிய அறிவிப்பை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டார்.

இது குறித்து மோடி மேலும் பேசுகையில், ”1300 முஸ்லிம் பெண்கள் ஆண்கள் துணையின்றி ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம் பெண்களும் ஹஜ் யாத்திரைக்கு செல்கின்றனர். அவர்களுடன் ஒரு ஆண் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

ஹஜ் யாத்திரைக்குச் செல்லும் முஸ்லிம் பெண்கள் ஆண்களின் துணையுடன் தான் செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்நிலையில் இந்தக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியிருக்கின்றது.

அதன்படி 45 வயதிற்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் இனி ஆண்கள் துணையின்றி ஹஜ் யாத்திரை செல்லலாம்.

சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்தக் கட்டுப்பாடு தொடரப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இனி முஸ்லிம் பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரைக்கு செல்லலாம்.

வழக்கமாக, ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பம் செய்தவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், பெண்களுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்கும் படியும், அவர்களை சிறப்பு பிரிவில் அனுமதிக்கும் படியும் உத்தரவிட்டுள்ளேன்” என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg