Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பை கமலா மில் தீ விபத்து: முகாமையாளர்கள் கைது!

In இந்தியா
Updated: 07:48 GMT, Jan 1, 2018 | Published: 07:42 GMT, Jan 1, 2018 |
0 Comments
1185
This post was written by : Ravivarman

மும்பை, கமலா மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தமை தொடர்பாக ‘ஒன் அபோவ்’ ஓட்டலின் 2 முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மும்பை, லோயர் பரேல் சேனாபதி பாபத் மார்க் பகுதியில் கமலா மில் வளாகம் உள்ளது. இங்கு உணவகங்கள், மது விடுதிகள், பிரபல தனியார் தொலைக்காட்சி அலுவலகங்கள் உள்பட பல அலுவலகங்கள் அமைந்துள்ளன.

இங்குள்ள 4 மாடிக் கட்டிடத்தின் மேல் மாடியிலுள்ள ‘ஒன் அபோவ்’ என்ற ஒரு விடுதியில் கடந்த 28-ம் தேதி இரவு நள்ளிரவு 12 மணிக்கு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் 55 பேர் காயம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மும்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg