ஐபோன்களின் வேகத்தை குறைத்தமைக்காக மன்னிப்புக்கோரியது அப்பிள் நிறுவனம்
This post was written by : Kemasiya

பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்தமைக்காக அப்பிள் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
புதிய ஐபோன்களை வாங்குவதற்காக பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்தமைக்கு அப்பிள் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மேலும் குறைந்த விலைக்கு பழைய ஐபோன்களின் மின்கலன்களை மாற்றித் தருவதாகவும் தெரிவித்துள்ளது.
அத்தோடு பிறந்திருக்கும் இந்த ஆண்டில் (2018) வாடிக்கையாளர்கள் தங்கள் ஐபோன்களின் மின்கலன்களின் திறனை அறிந்து கொள்வதற்கு மென்பொருள் வசதியொன்றை ஏற்படுத்தி தருவதாகவும் அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.