Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு முதலமைச்சரின் உத்தரவை கண்டித்து போராட்டம்

In இலங்கை
Updated: 08:02 GMT, Jan 1, 2018 | Published: 08:02 GMT, Jan 1, 2018 |
0 Comments
1188
This post was written by : Risha

வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்திலிருந்து சேவையை முன்னெடுக்குமாறு வடமாகாண முதலமைச்சர் உத்தரவிட்டதை கண்டித்து, வடமாகாண இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பழைய பேரூந்து நிலையம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் மூடப்பட்டதை தொடர்ந்து வடமாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பழைய பேரூந்து நிலையத்தை சூழவுள்ள வர்த்தகர்கள் கடைகளை மூடியும் கறுப்புக்கொடிகளை கட்டியும் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

எனினும் நாளைய தினம் பாடசாலை நாள் என்பதனால் மாணவர்களின் நலன்கருதி தையல் நிலையங்கள் திறந்திருந்த நிலையில், கடைகளை மூடுமாறு தெரிவித்து வர்த்தகர்களுடன் முரண்பாட்டிலும் ஈடுபட்டிருந்தனர்.

தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பயணிகளின் நலன் கருதி பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து புதிய பேரூந்து நிலையம் வரை இலவச பேரூந்து சேவையை முன்னெடுத்துள்ளதுடன் வட மாகாணத்திற்கான அனைத்து சேவைகளையும் அதிகரித்துள்ளனர்.

இதேவேளை அறிவித்தல்கள் பொதுமக்களுக்கு போதுமானதாக கிடைக்காமையினால் பயணத்தை மேற்கொள்ள வந்த பயணிகள் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து அனைத்து தனியார் சேவைகளும் ஈடுபட்டு வருவதனால் சிரமத்தினை எதிர்கொண்டிருந்தனர்.

நாளைய தினமும் இ.போ.ச பேரூந்துகள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடும் பட்சத்தில் பருவச்சீட்டுக்களை பெற்றுள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் தனியார் பேரூந்துகளில் இலவசமாக பயணிக்க முடியும் என வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரி. இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதிய பேரூந்து நிலையமானது கடந்த ஒரு வருடகாலமாக செயற்படாமல் உள்ள நிலையில் நேற்று நள்ளிரவிலிருந்து பழைய பேரூந்து நிலையத்தினை மூடி புதிய பேரூந்து நிலையத்திற்கு அனைத்து பேரூந்து சேவைகளும் செல்ல வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு வவுனியா நகரசபை செயலாளர் மற்றும் பொலிஸார் இணைந்து பழைய பேரூந்து நிலையத்திற்குள் பிரவேசிக்க முடியாதவாறு தடை ஏற்படுத்தினர். இந்நிலையிலேயே எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg