Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பு!

In இந்தியா
Published: 08:30 GMT, Jan 1, 2018 |
0 Comments
1094
This post was written by : Ravivarman
palanisamy

ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, கவர்னர் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பி உள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

‘தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் எனது இனிய 2018 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மேலும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg