Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல்வாதிகளின் அற்ப செயலுக்கு இளைஞர்கள் பலியாகின்றனர்: ஷிப்லி பாறூக்

In இலங்கை
Updated: 09:18 GMT, Jan 1, 2018 | Published: 08:32 GMT, Jan 1, 2018 |
0 Comments
1062
This post was written by : Risha
Shibly Farook

அரசியல்வாதிகளின் அற்பசொற்ப அரசியல் வாழ்க்கைக்கு இளைஞர் சமுதாயம் பலியாகின்றது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் சார்ந்த குற்றச்செயல்கள் பற்றி சமூகத்திற்கு விழிப்பூட்டும் வகையில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”போதையை ஒழிக்க வேண்டும், போதைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்லுகின்ற எந்த அரசியல்வாதியாவது இவற்றை தடுப்பதற்கு இறுக்கமான சட்டங்களை நடைமுறைப்படுத்த உதவியதுண்டா? அல்லது சட்டங்களை இன்னும் இறுக்கமாக இயற்றும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்றத்தில் உரையாற்றி அதற்கான தீர்க்கமான சட்டத்தினை இயற்ற முயற்சித்ததுண்டா?

சில அரசியல்வாதிகளும், அரசியல் அதிகாரம் கொண்ட நபர்களும் தங்களது அதிகாரத்தினை ஒரு சமூகம் அழியும் செயற்பாட்டிற்கும், தங்களது அரசியல் இலாபங்களுக்காகவும் மாத்திரம் பயன்படுத்திக்கொண்டு மனித சமூகத்தினை சீரழிக்க போதை மாத்திரை வியாபாரிகளுடன் கைகோர்த்து நிற்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளை இன்னும் நமது பிரதேசங்களில் இருந்து நீக்காவிட்டால் அதனால் பாதிக்கப்படப் போவது அப்பிரதேசங்களிலுள்ள எதிர்கால அப்பாவி சமூகம்தான் என்பதை நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும்.

எனவே போதைப் பொருளுக்கெதிராக அனைவரும் அணிதிரள வேண்டும். பிரதேசங்களை மையப்படுத்தி சிந்தித்து செயற்படக்கூடிய செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg