Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்து பென் ஸ்டாக்ஸ் நீக்கம்!

In கிாிக்கட்
Published: 08:38 GMT, Jan 1, 2018 |
0 Comments
1066
icon_com
This post was written by : Anojkiyan
stok

ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு பின்னர், அவுஸ்ரேலிய அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் பென் ஸ்டாக்ஸ் நீக்கப்படவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இதனால், பென் ஸ்டாக்ஸிற்கு பதிலாக ஆஷஸ் தொடரில் விளையாடிய டேவிட் மாலன் இணைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இரவு விடுதி ஒன்றில் தனிஒருவரை தாக்கியதால், அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பென் ஸ்டாக்ஸ் குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு இன்னும் விசாரணையின் இறுதி அறிக்கையை சமர்பிக்காத காரணத்தால் அவர் அணியிலிருந்து நீக்கப்படவுள்ளார்.

அத்தோடு இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு வீரரான அலெக்ஸ் ஹோல்ஸூம் அணியிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி மெல்பேர்னிலும், இரண்டாவது போட்டி ஜனவரி மாதம் 19ஆம் திகதி பிரிஸ்பேனிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜனவரி 21ஆம் திகதி சிட்னியிலும், நான்காவது ஒருநாள் போட்டி ஜனவரி 26ஆம் திகதி அடிலெய்டிலும், ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி ஜனவரி 28ஆம் திகதி பெர்த்திலும் நடைபெறவுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg