Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேஷியாவில் படகு விபத்து: 8 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 08:37 GMT, Jan 1, 2018 | Published: 08:37 GMT, Jan 1, 2018 |
0 Comments
1117
This post was written by : Suganthini

புத்தாண்டு தினத்தில் இந்தோனேஷியாவின் கலிமன்டன் தீவுக்கு அப்பாலான கடற்பரப்பில் படகொன்று மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக, மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 48 பயணிகளுடன் பயணித்த இந்தப் படகு இன்று (திங்கட்கிழமை) திடீரென்று நீரில் மூழ்கியுள்ளது. இதன்போது, 8 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தன்ஜாங் செலொர் பகுதியிலிருந்து, டரக்கன் பகுதி நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, இந்தப் படகு மூழ்கியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லையெனவும், அவர்கள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg