Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரசிகர்களே என்னுடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கினர்: நயன்தாரா

In சினிமா
Updated: 09:11 GMT, Jan 1, 2018 | Published: 09:11 GMT, Jan 1, 2018 |
0 Comments
1172
This post was written by : Surenth

தன்னுடையை வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகர்களுக்கு நன்றிகளையும் புதுவருட வாழ்த்துக்களையும் நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகளும், புத்தாண்டு வாழ்த்துக்களும். உங்கள் அன்பு என் வாழ்க்கையை அழகாக்கியுள்ளது.

என்னால் முடிந்த அளவு உழைப்பைக் கொடுத்து வருகிறேன். மற்றதை கடவுளிடம் விட்டுவிட்டேன். உங்கள் அன்பால் பொழுதுபோக்கான திரைப்படங்கள் மட்டுமல்லாது ‘அறம்’ போன்ற நல்ல திரைப்படங்களையும் எடுக்க முடிந்தது.

சினிமா பிரபலங்கள், ஊடகங்கள் என எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த வருடம் எல்லோருக்கும் மிகச் சிறப்பாக இருக்கும். உங்கள் எல்லோரின் அன்பால் தான் நான் சினிமாவில் இருக்கிறேன். உங்கள் இதயத்தில் எனக்கும் சிறு இடம் கொடுத்தமைக்கு நன்றி” என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg