Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்துக்கூறப் போவதில்லை: வைகோ!

In இந்தியா
Updated: 09:52 GMT, Jan 1, 2018 | Published: 09:21 GMT, Jan 1, 2018 |
0 Comments
1168
This post was written by : Ravivarman
vaiko-

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் மற்றும் கட்சி ஆரம்பித்தல் குறித்து நான் கருத்து எதுவும் கூறமாட்டேன் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி (வைகோ) தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”ஊழலற்ற அரசு அமைய வேண்டும் என்பதே மதிமுகவின் அடிப்படை கொள்கை. ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த விடயங்களுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை. ஜனநாயக நாட்டில் யாருக்கும் அரசியல் கட்சி ஆரம்பிக்க உரிமையுள்ளது.

ரஜினி அரசியல் கட்சி துவங்குவது பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல மாட்டேன். ஆன்மீக அரசியல் என்பதை என்ன பொருளில் கூறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்” என வைகோ மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg