Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆரம்பமே தோல்வி- அவுஸ்ரேலிய ஓபனில் செரீனா பங்கேற்பது சந்தேகம்

In டெனிஸ்
Updated: 09:54 GMT, Jan 1, 2018 | Published: 09:54 GMT, Jan 1, 2018 |
0 Comments
1155
This post was written by : Anojkiyan

ஒராண்டு ஓய்வின் பின் அபுதாபியில் நடைபெற்ற கண்காட்சி போட்டி ஒன்றில் மூலம் டென்னிஸ் களத்திற்கு மீள்பிரவேசித்த செரீனா அப்போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்ததன் பின், எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள அவுஸ்ரேலிய ஓபன் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செரீனாவிடம், இத்தோல்வியின் பின் அவுஸ்ரேலிய ஓபனில் கலந்து கொள்வீர்களா? என்று கேட்கபட்ட போது இத்தொடரில் உறுதியாக கலந்து கொள்வது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.

எனினும், 36 வயதான செரீனா வில்லியம்ஸ், மறுபிரவேசம் செய்வதற்கு முழுமையாக தயாராகி விட்டேனா என்பது எனக்கு தெரியாது எனவும் மீண்டும் வரும் போது, சம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்குரிய வலுவுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, உடற்தகுதி இல்லாமை, மன சோர்வு காரணமாக அவர் நீண்ட ஓய்வில் இருந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்காவின் விளையாட்டு பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கர்பமானதால் ஓராண்டு ஓய்வில் இருந்து அபுதாபியில் நடைபெற்ற கண்காட்சி போட்டி ஒன்றில் களமிறங்கிய செரீனா, பிரெஞ்ச் ஓபன் சம்பியனான லாத்வியா வீராங்கனை ஆஸ்டாபென்கோவிடம் 6-2, 3-6, 10-5 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg