Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸின் அரசியலில் மாற்றம்!

In ஐரோப்பா
Published: 09:40 GMT, Jan 1, 2018 |
0 Comments
1074
This post was written by : Suganthini

பிரான்ஸில் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக, அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டையிட்டு நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சி வாயிலாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரான்ஸில் எதிர்வரும் மாதங்களில் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவர எண்ணியுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திலும் சீர்திருத்தத்தை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்’ என்றார்.

மேலும், ‘ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ஜேர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து பாடுபடத் தீர்மானித்துள்ளோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg