Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்: வாலிபர்கள் கைது!

In இந்தியா
Updated: 10:22 GMT, Jan 1, 2018 | Published: 10:22 GMT, Jan 1, 2018 |
0 Comments
1204
This post was written by : Ravivarman

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தைக் கடத்தி வந்த 2 இளைஞர்களை கைது செய்துள்ளதாக திருவனந்தபுர விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டுபாயிலிருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு நேற்று (திங்கட்கிழமை) இரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று காலையில் டுபாயிலிருந்து இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளில் மலப்புரத்தைச் சேர்ந்த அபுபக்கர், முகம்மது ஷபி ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்களின் உடைமைகளை பரிசோதித்து பார்த்தபோது பற்றரிப் பொருட்களுக்குள் 3.17 கிலோ தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் யாருக்காக தங்கக் கடத்தலில் ஈடுபட்டார்கள்? என்பது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg