Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒட்டுசுட்டானில் நவீன வசதிகளுடன் பேரூந்து நிலையம் அமைக்க கோரிக்கை

In இலங்கை
Updated: 10:18 GMT, Jan 1, 2018 | Published: 10:18 GMT, Jan 1, 2018 |
0 Comments
1204
This post was written by : Risha

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் நவீன வசதிகளைக்கொண்ட பேருந்து நிலையம் ஒன்றினை அமைக்குமாறு பிரதேச வர்த்தகர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் உப நகரங்களில் ஒன்றாகக் காணப்படும் ஒட்டுசுட்டான் பகுதியானது போக்குவரத்து சேவைகளின் இணைப்பு மையமாகவும் காணப்படுகின்றது. இந்நிலையில் ஒட்டுசுட்டான் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று இன்மையால் பயணிகளும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இப்பகுதியில் பேருந்து நிலையம் ஒன்றினை அமைத்துத் தருமாறு பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

இவ்விடயம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையினுடைய செயலாளரை தொடர்பு கொண்டபோது, இப்பகுதியில் பேருந்து நிலையம் ஒன்றினை அமைப்பதற்கு காணி கோரப்பட்டுள்ளதாகவும் அதற்கான காணி வழங்கப்படுமிடத்து பேருந்து நிலையத்தினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg