Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹிட்லர் பயன்படுத்திய கார் ஏலத்திற்கு வருகிறது!

In அறிவியல்
Updated: 10:46 GMT, Jan 1, 2018 | Published: 10:46 GMT, Jan 1, 2018 |
0 Comments
1274
This post was written by : Kemasiya

ஜேர்மனியின் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய மெர்சிடஸ் பென்ஸ்கார் ஏலத்துக்கு வருகிறது.

1939ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த  கார், ரஷ்யாவின் கோடீஸ்வரர் ஒருவரினால் இம்மாதம் 17ஆம் திகதி அமெரிக்காவிலுள்ள ஹரிசோனா மாகாணத்தில்  ஏலம்  விடப்படவுள்ளது.

இந்த கால கட்டத்தில் தயாரிக்கப்பட்ட நான்கு அரிய வகை கார்களில் இதுவும் ஒன்றாகும். இது 7.7 லிட்டர் சூப்பர் சார்ஜ்டு எஞ்ஜினை கொண்டது. இதில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். சூப்பர் மெர்சிடஸ் என்ற சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.

இந்த காரின் தகட்டு எண் -1 ஏ 148461 என்ற எண்ணைக் கொண்டுள்ளது. பிரான்ஸை வீழ்த்திய பிறகு நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் இந்த காரில்தான் ஹிட்லர் நகரை வலம்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg