Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யதார்த்தமான முன்மொழிவுகளை உருவாக்க இத்தாலிய ஜனாதிபதி வலியுறுத்து

In
Updated: 10:24 GMT, Jan 1, 2018 | Published: 10:24 GMT, Jan 1, 2018 |
0 Comments
1102
This post was written by : Suganthini

இத்தாலியில் காணப்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க யதார்த்தமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று அரசியல் கட்சிகளுக்கு, அந்நாட்டு ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா (Sergio Mattarella) வலியுறுத்தியுள்ளார்.

இத்தாலியில் வேலையில்லாப் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. தேர்தலுக்கு முன்பாக இப்பிரச்சினைகள் உரிய முறையில் தீர்க்கப்பட வேண்டும். ஆகவே, பிரச்சினைகளைச் சமாளிக்கும் வகையில், யதார்த்தமான முன்மொழிவுகளை உருவாக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

இத்தாலியில் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் அண்மையில் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg